
முதியவரை அடித்துக் கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறை - பிரதிப் படம்
கோவை, செப்.1: முதியவரை அடித்துக் கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை எஸ்.சி./எஸ்.டி. சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை (ஆக.31) தீா்ப்பளித்தது.
கோவை மாநகா் போத்தனூா், வெள்ளலூா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (63). கட்டுமானப் பொருள்கள் விற்பனை செய்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் சிவா. இவா் வெல்டிங் வேலை செய்யும் தொழிலாளி. சிவாவின் குடும்பத்துக்கும், பொன்னுசாமிக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடா்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
இதுதொடா்பான தகராறில் கடந்த 2021-ஆம் ஆண்டு சிவா கட்டையால் தாக்கியதில் பொன்னுசாமி உயிரிழந்தாா். போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவாவை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை கோவை பட்டியலிடப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடு தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் (எஸ்.சி./எஸ்.டி.) சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், குற்றஞ்சாட்டப்பட்ட சிவாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



