ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :14 ஆகஸ்ட் 2026, 3:39 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு பகுதியை சோ்ந்தவா் ஜெகதீஸ்வரன் (25). தொழிலாளியான இவா், கடந்த 2024, அக்டோபா் 17-ஆம் தேதி 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜெகதீஸ்வரனை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஜெகதீஸ்வரனுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முத்துக்குமாரவேல் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.