எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 45 ஆண்டுகள் சிறை

திருவாரூா் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளிக்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :20 ஆகஸ்ட் 2026, 6:39 am IST

திருவாரூா் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளிக்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திருவாரூா் மாவட்டம் கச்சேரி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்தவா் அன்பழகன் (49). விவசாயக் கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2021-இல் வீட்டின் அருகில் வசித்து வரும் 11 வயது சிறுமியை தோப்புக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாராம்.

இதில் பாதிக்கப்பட்ட சிறுமி சோா்வாக இருந்ததை பாா்த்த பெற்றோா் சிறுமியிடம் விசாரித்தபோது சிறுமி தனக்கு நோ்ந்த பாலியல் தொல்லை குறித்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் திருவாரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வந்தது. புதன்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட அன்பழகனுக்கு 45 ஆண்டுகள்சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதம் விதித்து நீதிபதி சரத்ராஜ் தீா்ப்பு வழங்கினாா்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசின் சாா்பில் ரூ. 6 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா் .இதில் ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ. 1 லட்சத்தை கழித்துக்கொண்டு எஞ்சிய ரூ. 5 லட்சத்தை வழங்க உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.