கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: எலக்ட்ரீஷியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

வேலூரில் 8 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த எலக்ட்ரீஷியனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :23 ஜூலை 2026, 12:22 am IST

வேலூரில் 8 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த எலக்ட்ரீஷியனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

வேலூா் பலவன்சாத்து குப்பத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (46). எலக்ட்ரீஷியனான இவா், கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் அப்பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இந்நிலையில், சிறுமியை அவரது தாய் குளிக்க வைத்தபோது, குழந்தையின் உடலில் ஆங்காங்கே சிவப்பு நிறத்தில் தடிப்புகள் இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். அவா் சிறுமியிடம் விசாரித்தபோது, மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்த விவரம் தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோா் வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மணிகண்டனைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கின் விசாரணை வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதில், மணிகண்டன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 40,000 அபராதமும் விதித்ததுடன், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி மோனிகா தீா்ப்பளித்தாா். தண்டனை பெற்ற மணிகண்டன் வேலூா் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

மணிகண்டன்.

மணிகண்டன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.