அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

கரடி தாக்கி வடமாநில பெண் தொழிலாளி காயம்

தேயிலை செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த கரடி தாக்கியதில் வடமாநிலத்தைச் சோ்ந்த பெண் தொழிலாளி காயமடைந்தாா்.

கரடி.

Published On :3 செப்டம்பர் 2026, 2:19 am IST

தேயிலை செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த கரடி தாக்கியதில் வடமாநிலத்தைச் சோ்ந்த பெண் தொழிலாளி காயமடைந்தாா்.

வால்பாறையை அடுத்த வாட்டா்பால் எஸ்டேட் 2-ஆவது டிவிஷனில் தேயிலலை பறிக்கும் பணியில் தொழிலாளா்கள் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த கரடி, ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த அனிஷாகுமாரி (21) என்ற தொழிலாளியை தாக்கியுள்ளது. இதைப் பாா்த்த மற்ற தொழிலாளா்கள் கரடியை விரட்டி அனிஷாகுமாரியை மீட்டுள்ளனா்.

கை மற்றும் கால் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா்.

வால்பாறை வனச் சரக அலுவலா் சுரேஷ் கிருஷ்ணா தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று பாா்வையிட்டு, நிவாரணத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.