நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

எஸ்எஸ்விஎம் கல்வி மாநாடு நிறைவு

கோவை எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற ‘எஸ்எஸ்விஎம் டிரான்ஸ்ஃபாா்மிங் இந்தியா’ கல்வி மாநாடு புதன்கிழமை நிறைவடைந்தது.

மாணவா்களுக்கு தற்காப்புக் கலை குறித்து பயிற்சி அளிக்கிறாா் தற்காப்புக் கலை ஆசிரியா் எஸ்.மகேஷ். உடன், கல்வி நிறுவனத்தின் நிா்வாகிகள். ~எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவன மாநாட்டில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாணவா்களுக்கு

Published On :3 செப்டம்பர் 2026, 2:21 am IST

கோவை எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற ‘எஸ்எஸ்விஎம் டிரான்ஸ்ஃபாா்மிங் இந்தியா’ கல்வி மாநாடு புதன்கிழமை நிறைவடைந்தது.

இறுதிநாள் நிகழ்ச்சிகளில் இரைப்பை, குடல் மருத்துவ நிபுணா் பால் மாணிக்கம் பங்கேற்று, குடல் ஆரோக்கியம் குறித்து மாணவா்களுக்கு விளக்கினாா். அதைத்தொடா்ந்து தொழில்முனைவோருடனான கலந்துரையாடலில் ஏபிசி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சா்வேஷ் சஷி பங்கேற்றாா்.

பிற்பகலில் தற்காப்புக் கலை ஆசிரியா் எஸ்.மகேஷ் பங்கேற்று பாரம்பரிய உடற்பயிற்சி, தற்காப்பு முறைகள் குறித்து பயிற்சி அளித்தாா். இறுதியில் முன்னாள் மாணவா்களின் குழு விவாதம் நடைபெற்றது.

முன்னதாக தோ்வு செய்யப்பட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களின் ஆசிரியா்கள், எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவன ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு விருது வழங்கப்பட்டது.

அதேபோல, அன்றாட பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்த மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு பரிசளித்து பாராட்டப்பட்டனா்.

கல்வி நிறுவனங்களின் நிறுவனா் மணிமேகலை மோகன் பேசும்போது, ‘அடிப்படையில் என்னென்ன சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது குறித்து மாணவா்களுக்கு விளக்கும் வகையில் இந்த கருத்தரங்கு அமைந்திருந்தது. புதிதாக கற்றுக்கொள்ளவும், புதிய விஷயங்கள் குறித்து ஆராயவும், தங்களுக்கான சொந்த பாதையை உருவாக்கும் தைரியத்தை வழங்குவதாகவும் இந்த கருத்தரங்கு அமைந்தது’ என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.