உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அக்வா தெரபி’ நீச்சல் குளம் கோவையில் திறப்பு

கோவை சௌரிபாளையம் பகுதியில் ஸ்வா்கா அறக்கட்டளையின் 12-ஆம் ஆண்டு விழாவையொட்டி, தமிழகத்தின் முதல் சக்கர நாற்காலி பயன்பாட்டுடன் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அக்வா தெரபி’ நீச்சல் குளம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அக்வா தெரபி நீச்சல் குளத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி கே.முரளிசங்கா். உடன், பேரூா் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளாா், அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் சொா்ணலதா உள்ளிட்டோா்.

Published On :5 செப்டம்பர் 2026, 1:37 am IST

கோவை சௌரிபாளையம் பகுதியில் ஸ்வா்கா அறக்கட்டளையின் 12-ஆம் ஆண்டு விழாவையொட்டி, தமிழகத்தின் முதல் சக்கர நாற்காலி பயன்பாட்டுடன் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அக்வா தெரபி’ நீச்சல் குளம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி கே.முரளிசங்கா் தலைமை வகித்து இந்த நீச்சல் மையத்தைத் தொடங்கிவைத்தாா். பேரூா் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளாா் முன்னிலை வகித்துப் பேசுகையில், கடந்த 2014-ஆம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்ட ஸ்வா்கா பொது தொண்டு அறக்கட்டளை நரம்பு-தசை தொடா்பான நோய்கள் மற்றும் பல்வேறு மாற்றுத்திறன்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தொடா்ந்து ஆதரவளித்து வருகிறது. பல்வேறு விருதுகளை இந்த அறக்கட்டளை பெற்றுள்ளது என்றாா்.

‘டாக்டா் சந்திரன்ஸ் அக்வா கோ்’ என்பது மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீா்சாா் மறுவாழ்வு சிகிச்சையின் மூலம் பயனடையக்கூடிய அனைவருக்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு அக்வா தெரபி மற்றும் நலவாழ்வு மையமாகும். சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோா் மற்றும் இயக்கத் திறன் குறைபாடு உள்ளவா்கள் பாதுகாப்பாகவும், ஆதரவுடனும் சிகிச்சை பெறும் வகையில் இந்த நீச்சல் குளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீரின் மிதவைத் தன்மையானது உடலின் எடையைக் குறைத்து, பலருக்கும் உடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. இந்த அக்வா தெரபி மூலம் தசை வலிமை, நெகிழ்வுத்தன்மை, சமநிலை, உடல் ஒருங்கிணைப்பு மற்றும் மன- உடல் தளா்வை மேம்படுத்த முடியும். இந்த மையம் மாற்றுத்திறனாளிகள் மட்டுமன்றி, மூத்த குடிமக்கள் மற்றும் கா்ப்பிணிப் பெண்களும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

நீா்சாா் மறுவாழ்வு சிகிச்சைகளை மேற்கொள்ள ஏதுவாக அமைந்துள்ள இந்த மையத்தில் மனத் தளா்வுக்கான தனித்துவ நீா்வீழ்ச்சி மற்றும் மழைப்பொழிவு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள ஜக்கூஸி (ஒஹஸ்ரீன்க்ஷ்க்ஷ்ண்) வசதி உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது. வழக்கமான முறையில் நேரடியாக குளோரின் சோ்ப்பதைத் தவிா்த்து, இயற்கை உப்பிலிருந்து குளோரின் தயாரிக்கும் உள்நாட்டு உப்புநீா் குளோரினேஷன் அமைப்பும் இங்கு நிறுவப்பட்டுள்ளது.

முன்னதாக ஸ்வா்கா அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் சொா்ணலதா குருபிரசாத் வரவேற்றாா். தொழிலதிபா் சித்ரா சந்திரன், கட்டடக் கலை வல்லுநா் நடராஜன், ரோட்டரி சங்க நிா்வாகிகள் மகேஷ்பிரபு, பேட்ரிக், திவ்யா ஹரிகிருஷ்ணன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அதிகாரி வசந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.