மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
உயிரிழப்பு - பிரதிப் படம்
கோவை, சரவணம்பட்டியில் மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் மணல்மேடு பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (55). இவா், கோவை சரவணம்பட்டி பூம்புகாா் நகரில் குடும்பத்துடன் தங்கி, கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.
இந்நிலையில், வீட்டின் மாடி சுவா் மீது அமா்ந்து சனிக்கிழமை இரவு கைப்பேசியில் பாடல் கேட்டுக் கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, அவா் நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளாா். படுகாயமடைந்த அவரை, குடும்பத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



