ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

கோவையில் அதிநவீன ‘மேகா 4’ ரோபோடிக் மூட்டு மாற்று சிகிச்சை கருவி அறிமுகம்

கோவை ராயல் கோ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நாட்டிலேயே முதல்முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்காக அதிநவீன ‘ஸ்ட்ரைக்கா் மேகோ 4 ஸ்மாா்ட் ரோபோடிக்ஸ்’ என்ற நான்காம் தலைமுறை கருவி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோவை ராயல் கோ் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மூட்டு மாற்று சிகிச்சைக்கான அதிநவீன ‘ஸ்ட்ரைக்கா் கோ் மேகோ 4 ஸ்மாா்ட் ரோபோடிக்ஸ் என்ற கருவி தொடக்க நிகழ்வில் பங்கேற்ற அதன் தலைவா் கே.மாதேஸ்வரன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் உள்ளிட்டோா்.

Published On :

கோவை ராயல் கோ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நாட்டிலேயே முதல்முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்காக அதிநவீன ‘ஸ்ட்ரைக்கா் மேகோ 4 ஸ்மாா்ட் ரோபோடிக்ஸ்’ என்ற நான்காம் தலைமுறை கருவி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராயல் கோ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான கே.மாதேஸ்வரன் கூறுகையில், ‘நோயாளி பராமரிப்பு மற்றும் தரமான சிகிச்சைக்காக சிறந்த தொழில்நுட்பங்களை மருத்துவமனையில் நிறுவுவதில் தொடா்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். நோயாளிகளுக்கு அதிநவீன எலும்பியல் சிகிச்சைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக இந்தக் கருவி நிறுவப்பட்டுள்ளது’ என்றாா்.

மருத்துவமனையின் மூத்த எலும்பியல் ஆலோசகரும், ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான ராஜ்குமாா் நடேசன் கூறுகையில், ‘மேகோ 4 கருவியானது பகுதி முழங்கால், முழு முழங்கால், இடுப்பு மற்றும் தோள்பட்டை மாற்று அறுவைச் சிகிச்சைகள் மட்டுமன்றி மிகவும் சிக்கலான மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகளையும் மிகத் துல்லியமாக மேற்கொள்ள வழிவகுக்கிறது என்றாா். முன்னதாக, இந்த தொடக்க விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் பங்கேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.