பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

முழங்கால் மூட்டுத் தேய்மானப் பிரச்சினைக்கு ஒரு புதிய நம்பிக்கை

தமிழகத்தில் முதல்முறையாக இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டெம் செல் சிகிச்சை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் அறிமுகம்

Published On :

மூட்டு வலி, விறைப்புத்தன்மை, நடப்பதில் சிரமம் மற்றும் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமை ஆகியவற்றுக்கு முழங்கால் மூட்டுத் தேய்மானம் முக்கியக் காரணமாக இருக்கிறது. மாத்திரைகள், பிசியோதெரபி, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் ஊசிகள் போன்ற வழக்கமான சிகிச்சைகள் மூலம் நிவாரணம் கிடைத்தாலும், மிதமான முழங்கால் மூட்டுத் தேய்மானம் உள்ள பல நோயாளிகளுக்கு மூட்டுகளில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

முழங்கால் மூட்டுத் தேய்மானம் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு மூட்டு மாற்று அறுவைசிகிச்சை சிறந்த தீர்வாக இருக்கிறது. இருப்பினும், ஆரம்ப நிலை மற்றும் மிதமான நிலையில் உள்ளவர்களுக்கு, இயற்கை மூட்டுகளைப் பாதுகாப்பதும், முடிந்தவரை அறுவைசிகிச்சையைத் தவிர்ப்பதும் அல்லது தள்ளிப்போடுவதும் தான் முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையின் முடநீக்கியல் நிபுணர், மூட்டு மாற்று அறுவைசிகிச்சை மற்றும் மேக்கோ ஸ்ட்ரைக்கர் நிபுணரான டாக்டர் தீபக் குமார் கே.எஸ், இயற்கை மூட்டுகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளை அதிகம் பின்பற்றுகிறார். ஒவ்வொரு நோயாளியையும் கவனமாகப் பரிசோதித்து, மூட்டு மாற்று அறுவைசிகிச்சைக்கு முன்பு அவர்களின் இயற்கை மூட்டுகளைப் பாதுகாப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை அவர் ஆராய்ந்து அறிகிறார்.

Dr.Deepak Kumar K S

MBBS, MS(Orthopedics), MCH(Ortho)
Chief Consultant - Orthopedic surgeon
Knee Replacement and Mako Stryker Expert

Dr.Deepak Kumar K S MBBS, MS(Orthopedics), MCH(Ortho) Chief Consultant - Orthopedic surgeon Knee Replacement and Mako Stryker Expert

"மூட்டு மாற்று அறுவைசிகிச்சை நிபுணர்களாகிய நாங்கள், அறுவை சிகிச்சையை மட்டுமே முதல் மற்றும் ஒரே தீர்வாகப் பார்க்கக் கூடாது. நோயாளிகளின் இயற்கை மூட்டுகளைப் பாதுகாக்க என்னென்ன வழிகள் உள்ளனவோ அனைத்தையும் முயன்று பார்க்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். நோயாளிகளின் மூட்டுகளையும் அவர்களது வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த உதவும் புதிய மற்றும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட சிகிச்சைகளை நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம்," என்று டாக்டர் தீபக் கூறினார்.

Story image

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் மூத்த உதவிப் பேராசிரியரும், டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையின் ஆலோசனை மருத்துவரும், ஸ்டெம் செல் நிபுணருமான டாக்டர் சதீஷ் குமார் தங்கமணியுடன் டாக்டர் தீபக் இணைந்து, முழங்கால் மூட்டுத் தேய்மானம் உள்ள குறிப்பிட்ட சில நோயாளிகளை கவனமாகத் தேர்ந்தெடுத்து, பிறரிடமிருந்து பெறப்பட்ட எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவான மெசென்கைமல் தண்டு செல் சிகிச்சையை அளிக்கின்றனர்.

இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்தின் (DCGI) அங்கீகாரத்துடன் வழங்கப்படும் இந்த முறையான ஸ்டெம் செல் சிகிச்சை, மருத்துவத் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும். இது சாதாரண சிகிச்சைகளுக்கும், அறுவை சிகிச்சைகளுக்கும் இடையிலான ஒரு சிறந்த மாற்றுச் சிகிச்சையாக அமைந்துள்ளது.

'ஸ்டெம்பியூடிக்ஸ் ரிசர்ச்' (Stempeutics Research) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு 'சிப்லா' நிறுவனத்தால் வழங்கப்படும் இச்சிகிச்சை, மெசன்கைமல் ஸ்டெம் செல்களின் மூலம் மூட்டு வீக்கத்தைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியைச் சீராக்கவும், மூட்டு குருத்தெலும்புகளைப் பாதுகாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டாக்டர் சதீஷ் கூறுகையில், "நவீன மருத்துவத் தொழில்நுட்ப வளர்ச்சிகளை மருத்துவப் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் ஒரு முக்கியப் படியாக இக்கூட்டணி அமைந்துள்ளது. மூட்டுத் தேய்மானத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல நோயாளிகளுக்கு இந்த அணுகுமுறை மிகப்பெரிய அளவில் பயனளிக்கும் என நம்புகிறோம்," என்றார்.

நிலை 2 நிலை 3 முழங்கால் மூட்டுத் தேய்மானம் உள்ள நோயாளிகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட இந்த நவீன சிகிச்சை முறை ஒரு சிறந்த புதிய தேர்வாக அமைகிறது. இருப்பினும், நோயாளியின் தற்போதைய உடல்நிலை, நோயின் தீவிரம் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு நோயாளிக்குமான சிகிச்சை முறையை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்.

மூட்டுத் தேய்மானத்திற்கான சிகிச்சைகள் தொடர்ந்து மேம்பட்டு வரும் நிலையில், சரியான கட்டத்தில் சரியான சிகிச்சையை நோயாளிகளுக்கு வழங்குவதே மருத்துவமனையின் முக்கிய நோக்கமாகும். மருத்துவ ரீதியாக சாத்தியமான போதெல்லாம் இயற்கை மூட்டுகளைப் பாதுகாப்பதும், முற்றிலும் தவிர்க்க முடியாத நிலையில் மட்டுமே மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்வதுமே எங்களின் இலக்காகும்.

மருத்துவமனை மற்றும் எங்களின் மருத்துவ சேவைகள் குறித்து மேலும் அறிய, www.drkmh.com இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

பொறுப்புத் துறப்பு:  இது ஒரு விளம்பர தகவல். நிபந்தனைகள் பொருந்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.