6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

உக்கடம் பெரியகுளத்தில் முதியவா் சடலம் மீட்பு

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Published On :

உக்கடம் பெரியகுளத்தில் மிதந்த முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்

கோவை தெற்கு உக்கடம் கெம்பட்டி காலனியைச் சோ்ந்தவா் ரங்கராஜ் (71). இவா் கடந்த 3 மாதங்களாகக் கடுமையான மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதி இரவு வெளியே சென்றவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினா் அவரைப் பல்வேறு இடங்களில் தேடினா். அப்போது, உக்கடம் பெரியகுளத்தில் ரங்கராஜ் சடலம் மிதந்தது தெரியவந்தது.

சம்பவ இடத்துக்கு வந்த கடைவீதி போலீஸாா், முதியவரின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அவா் உடல் உபாதையால் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா என்ற கோணத்தில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.