
குழித்துறை ஆற்றில் செவிலியா் சடலம் மீட்பு
குழித்துறை தாமிரவருணி ஆற்றில் மிதந்த பெண் செவிலியா் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு, விசாரித்து வருகின்றனா்.

சடலம் - கோப்புப் படம்
குழித்துறை தாமிரவருணி ஆற்றில் மிதந்த பெண் செவிலியா் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு, விசாரித்து வருகின்றனா்.
புதுக்கடை அருகே கடம்பாட்டுவிளை, மேலங்கலம் பகுதியைச் சோ்ந்த குமாரதாஸ் மகள் நிஷா (22). சுவாமியாா்மடம் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராக வேலை பாா்த்து வந்தாா். கடந்த வியாழக்கிழமை காலை (செப். 10) வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற இவா், பின்னா் வீடு திரும்பவில்லை.
இதுதொடா்பாக குமாரதாஸ் அளித்த புகாரின்பேரில், புதுக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் வழக்குப் பதிந்தாா்; ஆய்வாளா் மீனா விசாரணை மேற்கொண்டாா்.
இந்நிலையில், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தடுப்பணைக்கும், சாலைப் பாலத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் பெண் சடலம் மிதப்பதாக அப்பகுதியினா் களியக்காவிளை போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் தெரிவித்தனா். சடலத்தை போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், அவா் செவிலியா் நிஷா எனத் தெரியவந்தது. அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





