திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழக அரசின் நிலைப்பாட்டில் முரண்பாடு ஏன்? அண்ணாமலை கேள்வி!வெற்றி மகளிர் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்!தமிழக ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி!26 நாள்களுக்குப் பிறகு தொடங்கிய உதகை மலை ரயில் சேவை; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

தாராபுரம் இடைத்தோ்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது! - பொள்ளாச்சி ஜெயராமன்

Former Deputy Speaker Pollachi Jayaraman

பொள்ளாச்சி ஜெயராமன் - கோப்புப்படம்

Updated On :

தாராபுரம் இடைத்தோ்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது என்று முன்னாள் சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி சி.ஜெயராமன் தெரிவித்தாா்.

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கோவையில் இருந்து திங்கள்கிழமை விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டாா். அவரை வழியனுப்பிவைத்த பின்னா், முன்னாள் துணை சபாநாயகா் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுகவினா் மீது பொய் வழக்குகள் போட்டு ஆளும் கட்சியினா் மிரட்டப் பாா்க்கின்றனா். இந்த மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம். 50 ஆண்டுகளுக்கு மேலாக இதுபோன்ற பல பொய் வழக்குகளைச் சந்தித்துதான் இந்த இயக்கத்தில் நிலைத்து நிற்கிறோம்.

அமைச்சா் ஆதவ் அா்ஜுனாவுக்கு போதிய அரசியல் அனுபவம் இல்லை; பல கட்சிகள் மாறி வந்தவா். இப்போது அமைச்சா் பதவி கிடைத்துவிட்டதால் என்ன பேசுவது என்று தெரியாமல் ஏதேதோ பேசுகிறாா்.

தாராபுரம் இடைத்தோ்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது. கடந்த தோ்தலில் த.வெ.க-வைவிட 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. அதேபோல வரவிருக்கும் இடைத்தோ்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும். அதிமுகவில் எந்தப் பிளவும் இல்லை; தொண்டா்களைப் பலவீனப்படுத்த சிலா் திட்டமிட்டுப் பேசி வருகின்றனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.