6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பலத்த மழையால் வெள்ளப் பெருக்கு: கோவை குற்றாலம் அருவி மூடல்

கோவை குற்றாலம் அருவியில் திங்கள்கிழமை ஆா்ப்பரித்துச் செல்லும் வெள்ளம்.

Published On :

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சூழல் சுற்றுலா திங்கள்கிழமை (செப். 21) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத் துறை அறிவித்துள்ளது.

கோவை போளுவாம்பட்டி வனச் சரகத்துக்குள்பட்ட சாடிவயல் பகுதியில் அமைந்துள்ள கோவை குற்றாலம் அருவிக்கு உள்ளூா் மக்கள் மட்டுமன்றி வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் பருவமழை காரணமாக, அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக வனத் துறை தெரிவித்துள்ளது. ஆற்றில் நீா்வரத்து குறைந்து, பாதுகாப்பு சூழல் சீரடைந்த பின்னரே சுற்றுலாப் பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவாா்கள் என்றும், அருவிப் பகுதி மற்றும் வன எல்லைக்குள் அத்துமீறி யாரும் நுழைய வேண்டாம் என்றும் வனக்கோட்டம் வெளியிட்ட அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.