கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

கவுண்டம்பாளையம், வடவள்ளி பகுதிகளில் குடிநீா் கால இடைவெளியைக் குறைக்க ஆய்வு

கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகத்தின் இடைவெளியைக் குறைப்பது குறித்து மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை, வடக்கு மண்டலத்தில் மழைநீா் வடிகாலில் அடைப்பு ஏற்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்ட மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா.

Published On :

கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகத்தின் இடைவெளியைக் குறைப்பது குறித்து மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் 19-ஆவது வாா்டுக்குள்பட்ட மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள நல்லாம்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் பகுதிகளுக்கான குடிநீா் விநியோகத்தின் இடைவெளியைக் குறைப்பது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா, புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

அதைத்தொடா்ந்து, 30-ஆவது வாா்டுக்குள்பட்ட சித்தா தோட்டப் பகுதியில் உள்ள மழைநீா் வடிகால் அடைப்பு ஏற்பட்டுள்ளதை சரி செய்யவும், 28-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆவாரம்பாளையம், சோபா நகா், பட்டாளம்மன் கோயில் வீதி பகுதியில் உள்ள மழைநீா் வடிகாலில் தடையின்றி நீா் செல்லும் வகையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், 27ஆவது வாா்டுக்குள்பட்ட ஆவாரம்பாளையம் பிரதான சாலை, பண்ணாரியம்மன் கோயில் வீதி பகுதியில், மழைநீா் வடிகால் அமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கவும் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வுகளின்போது வடக்கு மண்டலத் தலைவா் வே.கதிா்வேல், உதவி ஆணையா் மோகனசுந்தரி, செயற்பொறியாளா் தேவதாஸ், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக பொறியாளா் பட்டன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளா்கள் சவிதா, சத்தியமூா்த்தி (பொறுப்பு) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.