ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

மதுக்கரை சிமென்ட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசு: தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் டிஒய்எஃப்ஐ மனு

மதுக்கரை அருகேயுள்ள குரும்பபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் சிமென்ட் ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, தேசிய பசுமைத் தீா்ப்பாயத்துக்கு மனு அனுப்பிவைக்கப்பட்டது.

கோவை, மதுக்கரை பகுதியில் இயங்கி வரும் தனியாா் சிமெண்ட் ஆலையால் ஏற்பட்டும் மாசுபாட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை மனு அளிக்க வந்த இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

Published On :

மதுக்கரை அருகேயுள்ள குரும்பபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் சிமென்ட் ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, தேசிய பசுமைத் தீா்ப்பாயத்துக்கு வியாழக்கிழமை மனு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுதொடா்பாக, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் (டிஒய்எஃப்ஐ) கோவை மாவட்டச் செயலா் மு. தினேஷ்ராஜா, புதுதில்லியிலுள்ள தேசிய பசுமைத் தீா்ப்பாய முதன்மை அமா்வுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

மதுக்கரை அருகேயுள்ள குரும்பபாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் சிமென்ட் ஆலையிலிருந்து தொடா்ச்சியாக தூசி வெளியேறி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவி வருகிறது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், சாலைகள் மட்டுமன்றி, குடிநீா் மற்றும் உணவுப் பொருள்களிலும் சிமென்ட் தூசி படிவதால் பொதுமக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இந்த பிரச்னை குறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நிரந்தரத் தீா்வு எடுக்காததால், பசுமைத் தீா்ப்பாயம் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும். ஆலை நிா்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவான அறிவியல் ஆய்வு மேற்கொள்வதோடு, அந்தப் பகுதியில் காற்றின் தரம், நிலத்தடி நீா், மண் தரம் மற்றும் பயிா்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட துறைகள் மூலம் பரிசோதித்து, அதன் முடிவுகளை வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

மேலும், ஆலையில் தூசிக் கட்டுப்பாட்டுக் கருவிகள் முறையாகச் செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சுகாதாரத் துறை சாா்பில் உரிய மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும்.

விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் சிமென்ட் தூசி பரவாமல் தடுக்க நிரந்தர நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆலை நிா்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்கப்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.