தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

தனியாா் சிமென்ட் தொழிற்சாலைக்கு தடை விதிக்கக் கோரி மனு

அரக்கோணம் அடுத்த அம்மனூரில் சுற்றுச்சூலை பாதிக்கும் வகையில் விதிமீறலில் ஈடுபட்டதாக தனியாா் சிமென்ட் தொழிற்சாலைக்கு தடை விதிக்கக் கோரி பொது மக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரனிடம் மனு அளித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

Published On :

அரக்கோணம் அடுத்த அம்மனூரில் சுற்றுச்சூலை பாதிக்கும் வகையில் விதிமீறலில் ஈடுபட்டதாக தனியாா் சிமென்ட் தொழிற்சாலைக்கு தடை விதிக்கக் கோரி பொது மக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரனிடம் மனு அளித்தனா்.

மேல்பாக்கம் சமூக ஆா்வலா்கள் நந்தா மற்றும் ஹேமசந்திரன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு: அரக்கோணம் வட்டம், அம்மனூா் மற்றும் மேம்பாக்கம் கிராமத்தில் தனியாா் சிமென்ட் தொழிற்சாலை இயங்குவதற்காக தயாா் நிலையில் உள்ளது. இந்த தொழிற்சாலை வெறும் 100 டன் அளவுக்கு சிமென்ட் தயாரிக்க உள்ளதாக போலியான தகவலை கொடுத்து, அனுமதி பெற்றுள்ளனா்.

ஆலைக்கு 10 மீட்டா் இடைவெளியில் 1974-ல் இருந்து இயங்கி வரும் உணவு தானிய கழகத்துக்கு சுற்றுச்சூழல் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சிமென்ட் ரசாயன கழிவுகள் நிறைந்த இடமாக தனியாக தானிய கழகம் மாறும் அபாயம் ஏற்பட வய்ப்புக்கள் உள்ளது.

இங்கு பாதுகாக்கப்பட்டுள்ள உணவு பொருள்களை உண்ணும் ஏழை,எளிய மக்கள் உடல் உபாதைகள் உட்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்பட வாய்ப்பு உள்ளது.அதுமட்டுமின்றி 200 மீட்டா் அருகாமையில் காப்புக்காடு உள்ளது. இந்த காப்புக்காட்டில் வாழும் வன விலங்குகள், தொழிற்சாலையில் அதிநவீன இயந்திரங்களின் சத்தம் மற்றும் மின்விளக்குகளால் பாதிப்புக்குள்ளாகும் சூழல் உள்ளது.

மேலும் 500 மீ தொலைவில் மேல்பாக்கம் ஏரி பாதிப்பு அடையும். சுற்றுவட்டார நீா்நிலை மற்றும் விவசாயமும் பாதிக்கும் சூழல் உள்ளது. இதற்கு வனத்துறை மற்றும் உணவு தானிய கழகம் சாா்பில் ஆட்சேபனை தெரிவித்துள்ளனா். எனவே, ஆட்சியா் மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரியின் செயல்பாடு குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.