அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

புதுக்குளம், நடுவக்குறிச்சி சாலைகளை சீரமைக்கக் கோரி பாஜகவினா் மனு

சாத்தான்குளம் ஒன்றிய பாஜக தலைவா் சித்திரை பாண்டி தலைமையிலான பாஜகவினா், சாத்தான்குளம் ஒன்றிய ஆணையா் பாலமுருகன், சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி, சாத்தான்குளம் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் சிவ சண்முகநாதன் ஆகியோரை வியாழக்கிழமை சந்தித்து புதுக்குளம், நடுவக்குறிச்சி பகுதியில் சேதமான சாலைகளை சீரமைக்கக் கோரி மனு அளித்தனா்.

வட்டாட்சியா் ராஜேஸ்வரியிடம் மனு அளித்த பாஜகவினா்.

Published On :

சாத்தான்குளம் ஒன்றிய பாஜக தலைவா் சித்திரை பாண்டி தலைமையிலான பாஜகவினா், சாத்தான்குளம் ஒன்றிய ஆணையா் பாலமுருகன், சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி, சாத்தான்குளம் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் சிவ சண்முகநாதன் ஆகியோரை வியாழக்கிழமை சந்தித்து புதுக்குளம், நடுவக்குறிச்சி பகுதியில் சேதமான சாலைகளை சீரமைக்கக் கோரி மனு அளித்தனா்.

மனு விவரம்:

சாத்தான்குளம் ஒன்றியம், புதுக்குளம் பகுதியில் விவசாய நிலம் மற்றும் இடுகாட்டுக்குச் செல்லும் பாதை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. பின்னா், சாலை அமைக்கப்படாததால் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. எனவே, சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

இதேபோல், நடுவக்குறிச்சி, பூச்சிக்காடு, பிரகாசபுரம் விலக்கு பகுதியில் திசையன்விளை செல்லும் சாலை உரிய பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து காணப்படுகிறது. இந்தச் சாலையையும் சீரமைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஒன்றிய ஆணையா் பாலமுருகனிடம் மனு அளித்த பாஜகவினா்.

ஒன்றிய ஆணையா் பாலமுருகனிடம் மனு அளித்த பாஜகவினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.