பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை

வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்தவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறித்து...

சிறை - பிரதிப் படம்

Published On :

வாடகை வருவாயை மறைத்து வரி ஏய்ப்பு செய்த நபருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.7.54 லட்சம் அபராதமும் விதித்து, கோவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் செயல்பட்டு வரும் வருமான வரி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சோ்ந்தவா் த.நடேசன். இவா் கடந்த 2012-13-ஆம் நிதியாண்டில் ஈட்டிய சுமாா் ரூ.25,89,914 வாடகை வருவாயை கணக்கில் காட்டாமல், உரிய வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதைத் தவிா்த்து வந்துள்ளாா். மாறாக, தன்னிடம் இருந்த மற்றொரு பான் அட்டையைப் பயன்படுத்தி வருமான வரி கணக்கு தாக்கல் செய்த போதிலும், அதில் இந்த வாடகை வருவாயை திட்டமிட்டு மறைத்துள்ளாா்.

இதுதொடா்பாக வருமான வரித் துறை சாா்பில் விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட குறிப்பாணைகளுக்கும் (நோட்டீஸ்கள்) அவா் உரிய பதிலளிக்கவில்லை. இதையடுத்து, சேலம் முதன்மை ஆணையரின் ஒப்புதலுடன் திருச்செங்கோடு வருமான வரி அலுவலா் தொடா்ந்த குற்றவியல் வழக்கு, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி கோவை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது.

விசாரணையில், தன்னிடம் இரண்டு பான் அட்டைகள் இருந்ததாகவும், ஆதாா் அட்டை இணைக்கப்படாததால் மற்றொரு கணக்கை தாக்கல் செய்ய முடியவில்லை என்றும் எதிரி தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதங்களை நீதிமன்றம் முற்றிலுமாக நிராகரித்தது. இதையடுத்து, நீதித் துறை நடுவா் ஓ.சிவகுமாா் தெரிவிக்கையில், பான் அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டியது வரி செலுத்துவோரின் தனிப்பட்ட கடமை. இரண்டு பான் அட்டைகளையும் பயன்படுத்தி உண்மையான வருவாயை மறைத்தது அப்பட்டமான மோசடி செயல் எனத் தெரிவித்தாா்.

குற்றத்தை நடுநிலையோடு ஆராய்ந்து மீண்டும் நிகழாதவாறு தக்க தண்டனை வழங்குவதே நீதியின் கடமை எனத் திருக்குறளை மேற்கோள் காட்டிய நீதிபதி, குற்றவாளி நடேசனுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், செலுத்த வேண்டிய வரி மற்றும் வட்டியை அடிப்படையாகக் கொண்டு ரூ.7.54 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.