பவானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
கோபியைச் சேர்ந்த நூர்ஜகான் மகன் ரகுமான் (14). இவர், கோபி தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், சனிக்கிழமை பெற்றோருடன் சத்தி வந்த ரகுமான் அங்குள்ள பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்றபோது நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் ரகுமானின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து, சத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

