இசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு! இன்றுவரை ரசிகர்களை ஆட்டுவிக்கும் தேவாவின் பிஜிஎம்இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

விவசாயத்துக்கான மின் இணைப்புகளை 3 மாதங்களுக்குள் வழங்க வலியுறுத்தல்

விவசாயத்துக்கான மின் இணைப்புகளை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என வேளாண் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On :

விவசாயத்துக்கான மின் இணைப்புகளை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என வேளாண் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேளாண் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பேசியதாவது:

 காலிங்கராயன் கால்வாயில் தற்போது 15 கி.மீ தூரத்திற்கு கான்கிரீட் போடப்பட்டுள்ளது. மீதமுள்ள 75 கி.மீ தூரத்திற்கும் கான்கிரீட் போட்டு லைனிங் செய்தால், இன்னும் அதிகப்படியாக 7000 ஏக்கர் பாசனம் பெற முடியும். காலிங்கராயன் கால்வாய், காவிரியை காப்பாற்ற வேண்டும் எனில் நீர் நிலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆலைகளை மாற்றியமைக்க வேண்டும்.

 பவானிசாகர் அணைக்கு நீர் தரக்கூடிய நீலகிரி மாவட்டத்தில் உள்ள 14 அணைகளும் தூர்வாரப்பட்டால், அதிகப்படியாக 36 டிஎம்சி நீரும், 1600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். மஞ்சள் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமெனில் ஒருங்கிணைந்த மஞ்சள் வளாகத்தை ஈரோட்டில் அமைக்க வேண்டும். விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு மூன்று மாத காலத்திற்குள் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொளத்துப்பாளையம் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து, ஆட்சியர் எஸ்.பிரபாகர் பேசுகையில், மின் இணைப்பிற்கு கம்பம் நடுவதற்கு ஆட்சேபனையுள்ள மனுக்களுக்கு மட்டும் வருவாய்த்துறை மூலமாக தடையில்லா சான்று பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இதர மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட இடத்திலேயே வருவாய்த் துறையினரை வரவழைத்து தாமதமின்றி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.