பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

பெருந்துறை சிப்காட்டில் உணவு பூங்கா தொடங்க வலியுறுத்தல்

பெருந்துறை சிப்காட்டில் உணவுப் பூங்கா, ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட அனைத்துத் தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Updated On :

பெருந்துறை சிப்காட்டில் உணவுப் பூங்கா, ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட அனைத்துத் தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இக்கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கூட்டமைப்பின் தலைவர் என்.சிவநேசன் தலைமை வகித்தார். பொதுச்செயலர் வி.கே.ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

 ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக ஆட்சியர் பிரபாகரிடம், இக்கூட்டமைப்பு நிர்வாகிகள் அளித்த மனு விவரம்:

 காய்கறிகள், பழங்கள் கெடாமல் பாதுகாக்க குளிர்சாதனக் கிடங்குகள் அனைத்து வட்டங்களிலும் அமைக்க வேண்டும். இவைகளில் சூரிய ஒளி மின்சக்தி பயன்பாட்டை கொண்டு வர வேண்டும். தாளவாடியில் சுய உதவிக் குழுக்களுடன் இணைந்து மூலிகை பூங்கா, மூலிகை ஏற்றுமதி மண்டலம் அமைக்க வேண்டும்.

 சத்தியமங்கலத்தில் வாசனை திரவிய மையம் அமைக்க வேண்டும். ஈரோடு மாநகரில் மஞ்சளில் இருந்து பவுடர், ஆயில், ஒலியோரேசின் எனும் ரசாயன வேதிப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட வேண்டும்.

அனைத்து வேளாண் பொருள்களின் மீதான வணிக செஸ் அறவே நீக்கப்பட வேண்டும். பெருந்துறை சிப்காட்டில் உணவுப் பூங்கா, உணவு ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.