கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

செல்லியாண்டியம்மன் கோயில் தேரோட்டம்

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி, அம்மன் அழைத்தல் மற்றும் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, செல்லியாண்டிம்மனுக்கு சிறப்பு அலங்கார வழிபாடுகளும், திருக்கல்யாண உற்சவமும் வியாழக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து, கோயில் முன்பிருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் தேரோட்டம் தொடங்கியது.

பவானி சட்டப் பேரவை உறுப்பினர் பி.ஜி.நாராயணன், பவானி சார்பு நீதிபதி என்.ராமநாதன், முதலாம் மாவட்ட உரிமையியல் கூடுதல் நீதிபதி எஸ்.லட்சுமி, குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ஆர்.திருமால், மாவட்ட உரிமையியல் நீதிபதி கோகுலகிருஷ்ணன்,

நகர்மன்றத் தலைவர் கே.சி.கருப்பணன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், நகர திமுக செயலர் ப.சீ.நாகராஜன் உள்ளிட்டோர் வடம் பிடித்துத் தேரோட்டத்தைத் தொடக்கி வைத்தனர்.   காவேரி வீதி, மேட்டூர் சாலை, கிழக்குக் கண்ணார வீதி, தேர் வீதி, கீரைக்கார வீதி வழியாக மீண்டும் தேர் கோயிலைச் சென்றடைந்தது.

இதில், விழாக் குழுத் தலைவர் எஸ்.நஞ்சப்பன், பொருளாளர் மா.சுப்பிரமணியம், செயலர் கு.செல்வராசு உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.