மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா, ஈரோடு, வ.உ.சி. பூங்கா மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் தொடங்குகிறது.
இதையொட்டி, தமிழகம் வாசிக்கிறது எனும் தலைப்பிலான விழிப்புணர்வுப் பேரணி ஈரோடு சிஎஸ்ஐ பள்ளி மைதானத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது. இப்பேரணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவகுமார் தொடக்கிவைக்கிறார்.
ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் இப்பேரணியானது, பிரப் சாலை வழியாக எம்ஜிஆர் சிலை சந்திப்பு, மேட்டூர் சாலை வழியாக புத்தகத் திருவிழா நடைபெறும் வ.உ.சி. பூங்கா மைதானத்தை அடைகிறது.
இப்பேரணியில் 9 முதல் பிளஸ் 2 பயிலும் மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி அளவில் தொடங்கும் புத்தகத் திருவிழாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடக்கிவைக்கிறார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.
மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுக உரையாற்றுகிறார். பேரவையின் மாநிலச் செயலர் ந.அன்பரசு, பொருளாளர் அழகன் உள்பட பலர் பங்கேற்கின்றனர். பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








