பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற கட்டணம் உயர்வு: நவம்பர் 10-இல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பிறப்பு,  இறப்பு சான்றிதழ் பெற 15 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து நவம்பர் 10-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:24 am

DIN

பிறப்பு,  இறப்பு சான்றிதழ் பெற 15 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து நவம்பர் 10-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி கூறியதாவது:
பிறப்பு,  இறப்பு சான்றிதழ் வாங்குவதற்கு முதல் நகல் பெற ரூ. 17-ம்,  அதற்கு மேல் ஒவ்வோர் நகல் பெறுவதற்கும் ரூ. 5 வீதம் மட்டுமே கட்டணமாக பெறப்பட்டு வந்தது.  இந்நிலையில் தமிழகம் முழுவதும் இதற்கான கட்டண உயர்வை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி முதல் நகல் பெற ரூ. 200- ம்,  அதற்கு மேல் வாங்கும் ஒவ்வொரு நகலுக்கும் ரூ. 200 வீதம் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.  இந்த திடீர் கட்டண உயர்வு  பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கட்டண உயர்வு கிட்டத்தட்ட 15 மடங்கு கூடுதலாகும்.  எனவே, தமிழக அரசு இக்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் வரும் நவம்பர் 10-ஆம் தேதி ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.