மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பவானிசாகர் வனப் பகுதியில் காயத்துடன் மீட்கப்பட்ட ஆண் மயிலுக்கு சிகிச்சை

ஈரோடு மாவட்டம், பவானி சாகர் வனப் பகுதியில் 4 நாள்களுக்கு முன்னர் காலில் காயத்துடன் மீட்கப்பட்ட ஆண் மயில் சிகிச்சைக்குப் பின் வியாழக்கிழமை வனப் பகுதியில் விடப்பட்டது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 10:31 pm

DIN

ஈரோடு மாவட்டம், பவானி சாகர் வனப் பகுதியில் 4 நாள்களுக்கு முன்னர் காலில் காயத்துடன் மீட்கப்பட்ட ஆண் மயில் சிகிச்சைக்குப் பின் வியாழக்கிழமை வனப் பகுதியில் விடப்பட்டது.
 ஈரோடு மாவட்டம், பவானி சாகர் வனச் சரகத்துக்கு உள்பட்ட விலாமுண்டி வனத் துறையினர் கடந்த திங்கள்கிழமை ரோந்து சென்றனர். அப்போது, ஒன்றரை வயது ஆண் மயில் ஒன்று வலது  காலில் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இந்த மயிலை மீட்ட வனத் துறையினர் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் வன கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். 
 அங்கு வன கால்நடை மருத்துவ அலுவலர் கே.அசோகன்  நான்கு நாள்களாக அந்த மயிலுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இதில், காயம் குணமடைந்த  மயிலை பவானி சாகர் வனப் பகுதியில் வியாழக்கிழமை பாதுகாப்பாக வனத் துறையினர் விடுவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.