மாநில துப்பாக்கி சுடும் போட்டி: வேளாளர் கல்லூரி மாணவிக்குத் தங்கம்
மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வேளாளர் மகளிர் கலைக் கல்லூரி மாணவி என்.கீர்த்தனா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.


மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வேளாளர் மகளிர் கலைக் கல்லூரி மாணவி என்.கீர்த்தனா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
சென்னையில் 43-ஆவது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி அண்மையில் நடைபெற்றது. ஸ்கீட் ஜுனியர் மகளிர் பிரிவு, ஸ்கீட் மகளிர் பிரிவு ஆகியவற்றில் இக்கல்லூரியின் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவி என்.கீர்த்தனா தங்கப் பதக்கம் வென்றார்.
பதக்கம் வென்ற மாணவி கீர்த்தனாவுக்கு கல்லூரித் தலைவர் எஸ்.எஸ்.கந்தசாமி, தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், முதல்வர் டி.கமலவேணி, உடற்கல்வி இயக்குநர் கே.மாலதி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...