சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்
இப்பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் ஆய்வு செய்தார். சென்னிமலை பேரூராட்சிக்குள்பட்ட சிரகிரிவேலவன் நகர் மேல்நிலைத் தண்ணீர் தொட்டி, மாதேஸ்வரா நகர் ஆகிய பகுதியிலுள்ள
வடிகால்வாய்களில் மேற்கொள்ளப்படும் சுகாதாரப் பணிகளைப் பார்வையிட்டார். மேலும், வீடுகளில் தண்ணீர் சேமித்து வைத்துள்ள தொட்டிகளைப் பார்வையிட்டு சுத்தம் செய்ய அறிவுறுத்தினார். சாஸ்திரி நகர் பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியைப் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, பெருந்துறை வட்டாட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.