வெள்ளோட்டில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் பறவைகளின் வருகை இல்லாததால் அப்பகுதி கிராம மக்கள் தீபாவளியையொட்டி புதன்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
சென்னிமலை ஒன்றியம், வெள்ளோட்டில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்குள்ள பறவைகளுக்கு இடையூறு கொடுக்கக் கூடாது என்பதற்காக கிராம மக்கள், தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க வனத் துறை தடை விதித்து உள்ளது. இதற்கு கிராம மக்களும் ஒத்துழைத்தனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட கடும் வறட்சியால் குளம் முற்றிலும் வற்றியது. இதையடுத்து, பறவைகள் வருகை குறைந்து, தற்போது சுத்தமாக பறவைகள் வருகை நின்று போனது.
ஆகவே, சரணாலயத்தை, சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த ஆண்டு தீபாவளியையொட்டி, புதன்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பறவைகள் இல்லாத காரணத்தால், கிராம மக்கள் இந்த தீபாவளியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். தடை ஏதும் விதிக்கப்படவில்லை. குளத்தில் தண்ணீர் நிரம்பி, பறவைகள் வந்தால் அது பற்றி யோசிப்போம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.