ஈரோடு நகரில் முக்கியச் சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகத்தில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்ற இளைஞர்களுக்கு போலீஸார் அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில் அதிவேகத்தில் செல்லும் சம்பவங்கள் குறித்து காவல் துறையினருக்குத் தொடர்ந்து பல்வேறு புகார்கள் சென்றன. குறிப்பாக, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இரவு நேரங்களில் அதிரவைக்கும் சப்தத்துடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை இயக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என தொடர்ந்து மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஈரோடு, பிரப் சாலையில் மாநகர் போக்குவத்துப் பிரிவு சார்பில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், துணை கண்காணிப்பாளர் சேகர் தலைமை வகித்துப் பேசுகையில், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலைகளில் இளைஞர்கள் இருசக்கர வாகன பந்தயம் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, ஈரோடு மாநகருக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 25 பேர் இருசக்கர வாகனங்கள் வேகமாக இயக்குவதைக் கைவிடுவதாக உறுதி ஏற்றுக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் கலங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


