எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

குடிநீர் ஏற்றும் இயந்திர கட்டடத்தைச் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

கொடுமுடி அருகே  கிணற்று நீரை உறிஞ்ச இயந்திரம் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தைச் சுற்றிலும் மண்டிக் கிடக்கும் முள்புதர் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:29 pm

DIN

கொடுமுடி அருகே  கிணற்று நீரை உறிஞ்ச இயந்திரம் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தைச் சுற்றிலும் மண்டிக் கிடக்கும் முள்புதர் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடுமுடி பேரூராட்சிக்கு உள்பட்ட நகப்பாளையம் 1-ஆவது வார்டு அருந்ததியர் காலனிக்கு உள்பட்ட கிணறு மற்றும் அருகில்  நீரை உறிஞ்சும் மின்சார இயந்திரம் அறை அமைந்துள்ளது. இதைச் சுற்றிலும் முள்புதராக உள்ளது. அத்துடன் 
ஆக்கிரமிப்புகளும் இருக்கின்றன.
இதுகுறித்து சமுக ஆர்வலர் மா.ஆறுமுகம்  மற்றும் நகப்பாளையம் அருந்ததியர் காலனி பொதுமக்கள்  கூறியதாவது: 1000 க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வரும் இப் பகுதி குடிநீர் பயன்பாட்டுக்காக சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு  கிணறு வெட்டப்பட்டது. இதில் கயிறு கட்டி வாளி மூலம் நீரை எடுத்துப் பயன்படுத்தி வந்தனர். தற்போது நகப்பாளையம் அருந்ததியர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சிறிய மேல்நிலைத் தொட்டியில் கிணற்று நீரை ஏற்றி மக்கள் குடிநீர் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.  நீர் உறிஞ்சும் மின் இயந்திரத்துக்காக கட்டடமும்  உள்ளது. தற்போது அறையை சுற்றிலும் முள்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. அதுமட்டுமன்றி தேங்காய் மட்டைகள்,தென்னை மட்டைகள்  ஆக்கிரமித்துள்ளதால் செல்லும் வழி தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் விஷ ஜந்துக்கள் அங்கு உள்ளன. எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.