விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி

ஈரோட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  தொடங்கி வைத்தார்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:31 pm

DIN

ஈரோட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  தொடங்கி வைத்தார்.
கோபி உள்கோட்ட காவல்துறை , வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத்துக் கழகம், போக்குவரத்து காவல்துறை  இணைந்து 25-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு வார விழாவை நடத்தின. இதை ஒட்டி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில்  வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.  பேரணியில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது சாலை விதிகள், விபத்துகளைத் தடுப்பது, சாலை விதிகள் மீறப்படுவது குறித்தும் பதாககைகள் ஏந்திச் சென்றனர். மேலும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு  துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.
பேரணி கோபி கரட்டூர் பகுதியில் தொடங்கி புதுப்பாளையம், பேருந்து நிலையம், கடைவீதி, பெரியார் திடல், கச்சேரிமேடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று ல.கள்ளிப்பட்டியில் முடிவுற்றது. 
இதில், கோபி கோட்டாட்சியர் கோவிந்தராஜன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிவேலு, கோபி உள்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் செல்வம், கோபி வட்டாட்சியர் பூபதி , மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முகுந்தன், பாமாபிரியா, காவல்துறை ஆய்வாளர்கள் பாலமுரளிசுந்தரம், பாலசுப்பிரமணியம், சண்முகம்  உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.