பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

அத்திக்கடவுத் திட்டத்தில் விடுபட்ட  குளம், குட்டைகளை சேர்க்க வலியுறுத்தல்

அத்திக்கடவுத் திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டைகளை சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On :

அத்திக்கடவுத் திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டைகளை சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பெருந்துறை சிப்காட் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த அத்திக்கடவு - அவிநாசி திட்டப் போராட்டக் குழு உறுப்பினர்கள்,  சிப்காட்டால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நலச் சங்கம் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஈங்கூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு,  ஈங்கூர் ஊராட்சி முன்னாள் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். 
கூட்டத்தின் முடிவுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி கூறியதாவது: 
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் பெருந்துறை சிப்காட் சுற்றுவட்டாரத்தில் உள்ள குளம், குட்டைகளை சேர்க்கவில்லை.  இப்பகுதி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், வறட்சியை போக்கவும்,  அத்திக்கடவு திட்டத்தில் இப்பகுதி குளம், குட்டைகளை சேர்க்க வேண்டும். 
இதை வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம்  வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி பெருந்திரளாகச் சென்று மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.