பவானி அருகே உள்ள பட்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் 108 பேருக்கு ரூ. 65.82 லட்சம் கடனுதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் ஆர்.இளங்கோ தலைமை வகித்தார். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியக் குழு உறுப்பினர் கே.தட்சிணாமூர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் என்.கிருஷ்ணராஜ், பட்லூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் பி.கே.விஸ்வநாதன், இயக்குநர் கே.மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், சங்க உறுப்பினர்கள் 57 பேருக்கு கன்று வளர்ப்புக்கு ரூ. 45.32 லட்சம், மாற்றுத் திறனாளிகள் கடன், மகளிர் சுய உதவிக் குழுவினர் கடன் உள்பட மொத்தம் 108 பேருக்கு ரூ. 65.82 மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். இதில், அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக செயலாளர் வி.எஸ்.சரவணபவா, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் எஸ்.பி.ரமேஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் கே.ஆர்.ஜான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி - புகைப்படங்கள்

திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்! தர்மன் படக்குழு கொண்டாட்டம்!

திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைது

மூன்றாவது வீரராக களமிறங்கி சதம் விளாசி அசத்திய தேவ்தத் படிக்கல்; அதே இடத்தில் தொடர்வாரா?
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


