பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

சத்திரம் மாரியம்மன் கோயில் திருவிழா: கம்பத்துக்குப் புனிதநீர் ஊற்றி வழிபாடு

ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, கம்பத்துக்குப் புனித நீர் ஊற்றி பெண்கள் புதன்கிழமை வழிபட்டனர்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, கம்பத்துக்குப் புனித நீர் ஊற்றி பெண்கள் புதன்கிழமை வழிபட்டனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் பொங்கல் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா பூச்சாட்டுதலுடன் திங்கள்கிழமை  இரவு தொடங்கியது. இதையொட்டி, மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, கோயிலுக்கு அருகே உள்ள தெப்பக்குளத்தில் கம்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு கோயில் முன் கம்பங்கள் நடப்பட்டன. நாள்தோறும் பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.
இதேபோல, பெரியவலசு மாரியம்மன் கோயிலிலும், காவிரி சாலையில் உள்ள மாரியம்மன் கோயிலிலும் செவ்வாய்க்கிழமை கம்பங்கள் நடப்பட்டன. இக்கோயில்களில் டிசம்பர் 25 இல் பிற்பகலில் நடைபெறும் தீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்துக் கொண்டு கோயிலுக்குச் செல்கின்றனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு  அபிஷேகம் நடைபெறுகிறது.
டிசம்பர் 26 ஆம் தேதி முற்பகலில் மாவிளக்கு பூஜையும், பொங்கல் இடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 
இதையொட்டி ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்த உள்ளனர். 27 ஆம் தேதி காலை 7 மணிக்கு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோயில்களில் இருந்து எடுக்கப்படும் கம்பங்கள் ஊர்வலமாக தெப்பக்குளத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
தொடர்ந்து, காலை 10 மணிக்கு மலர் பல்லக்கில் அம்மனின் திருவீதி உலா காட்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. 28 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.