கொடுமுடி அருகே தெற்குபுதுப்பாளையம் அருந்ததியர் காலனியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் விழா டிசம்பர் 22 ஆம் தேதி பூச்சாட்டுதலுடதன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை அம்மனுக்கு முதாலம் கால பூஜை தொடங்கியது. மதியம் பக்தர்கள் அனைவரும் கொடுமுடி காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடியும், அக்னிச் சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் தீர்த்தம் எடுத்துக் கொண்டும் மேலதாளம் முழங்க கோயிலை வலம் வந்து கோயிலில் வைத்து அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்தனர்.
திங்கள்கிழமை மாலை பொங்கல் வைக்கும் விழா, மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், கொடுமுடி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.65! 11 காசுகள் உயர்வு!

கூகுள் குரோமில் விமானம் ஓட்டும் அனுபவம்! பெறுவது எப்படி?

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

ஸ்காட்லாந்துக்கு எதிராக நெய்மர் 100% விளையாடுவார்..! பயிற்சியாளர் அன்செலாட்டி உறுதி!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


