ஆடுகளுக்கான நோய்த் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

ஆடுகளைத் தாக்கக் கூடிய நோய்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு, தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

ஆடுகளைத் தாக்கக் கூடிய நோய்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு, தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
 ஈரோடு மாவட்டம், சென்னிமலை, அ.புதுப்பாளையம் கிராமத்தில் சென்னை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை நலக் கல்வி மையம், நச்சு உயிரி தடுப்பூசி ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து இம்முகாமை நடத்தின.
 ஆடுகளைத் தாக்கும் நீல நாக்கு, ஆட்டுக்கொல்லி நோய்கள் குறித்த விழிப்புணர்வு, தடுப்பூசி முகாமில், கால்நடை நலக் கல்வி மையம் இயக்குநர் குமணன், செம்மறி ஆடுகளுக்கு வரக்கூடிய நோய்கள், போட வேண்டிய தடுப்பூசிகள் குறித்து விளக்கினார். இதில், 300 செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
 அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு  கால்நடை மருத்துவர்கள் விளக்கமளித்தனர். இதில், தடுப்பூசி ஆராய்ச்சி மையப் பேராசிரியர் கிருஷ்ணமோகன், கால்நடை பல்கலைக்கழகப் பேராசிரியர் செல்வராஜ், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மகேஸ்வரன் உள்ளிட்ட விவசாயிகள், பண்ணையாளர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com