டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பாரியூர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.18 லட்சம்

கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 18 லட்சத்து 17 ஆயிரத்து 993 வசூலானது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:03 am

DIN

கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 18 லட்சத்து 17 ஆயிரத்து 993 வசூலானது.
கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் உள்ள உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதில்  நிரந்தர உண்டியலில் ரூ.17 லட்சத்து 46 ஆயிரத்து 008-ம் ,  திருவிழா காலத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ரூ. 71 ஆயிரத்து  985-ம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். மேலும் இந்த உண்டியல்களில் 88 கிராம் தங்கம், 110 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இக்கோயிலுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர்.  உண்டியல் காணிக்கை எண்ணும் போது  ஆஸ்திரேலியா,  சிங்கப்பூர்,  இந்தோனேஷியா,  மலேசியா  ஆகிய நாடுகளின் ரூபாய் நோட்டுகளும் இருந்தன.
இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் நா.பழனிக்குமார்  முன்னிலையில்  உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.  இதில்,  இந்து சமய அறநிலைத் துறை உதவி ஆணையர் முருகையா, செயலர் நடராஜ்,  இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் கமலா ஆகியோர் கலந்து கொண்டனர். காணிக்கை எண்ணும் பணியில் கோபி பிகேஆர் மகளிர் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள், கம்பன் கல்வி நிலையம் மாணவர்கள் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.