திருப்பூர் மாவட்ட யோகாசன சங்கம், திருப்பூர் அரிமா சங்கம் ஆகியன இணைந்து நடத்திய யோகா போட்டியில் பெருந்துறை, கொங்குப் பள்ளி மாணவர்கள் அதிக புள்ளிகளைப் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.
திருப்பூரில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியில், பெருந்துறை, கொங்குப் பள்ளியைச் சேர்ந்த, 58 மாணவர்கள் கலந்துக் கொண்டு, அதிக புள்ளிகளைப் பெற்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.
இப்பள்ளியைச் சேர்ந்த வி.அஸ்வத், சாம்பியன் பட்டம் பெற்றார். மாணவியருக்கான பிரிவில், பி.கே.வைஷ்ணவி சாம்பியன் பட்டம் பெற்றார். மேலும், சிறப்புப் பிரிவுக்கான போட்டியில் எல்.வி.நிவேதிதா, கே.கே.நகுல்பிரணவ், என்.டி.சிவசஞ்சய், எஸ்.வி.நகுலன் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
பரிசுப் பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்சி அளித்த யோகா ஆசிரியை டி.தனலட்சுமி ஆகியோரை பள்ளித் தலைவர் ஜி.யசோதரன், துணைத் தலைவர் எஸ்.குமாரசாமி, தாளாளர் டி.என்.சென்னியப்பன், பொருளாளர் பி.ஆர்.சுப்பிரமணியன், இணைச் செயலாளர் கே.பி.முத்துராமலிங்கம், முதல்வர் எம்.முருகன் ஆகியோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.