டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெருந்துறையில் 286 பேருக்கு தாலிக்குத் தங்கம்

பெருந்துறை, காங்கயம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட  286 ஏழைப் பெண்களுக்கு, ரூ. 61.78 மதிப்பிலான தாலிக்குத் தங்கம்

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:04 am

DIN

பெருந்துறை, காங்கயம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட  286 ஏழைப் பெண்களுக்கு, ரூ. 61.78 மதிப்பிலான தாலிக்குத் தங்கம் மற்றும் ரூ.1.24  கோடியில் திருமண நிதியுதவி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். திருப்பூர் மக்களவை உறுப்பினர் வி.சத்யபாமா முன்னிலை வகித்தார். 
விழாவில், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் பங்கேற்று,  பெருந்துறை, காங்கயம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த, 286 ஏழைப்பெண்களுக்கு, ரூ.61,78,172 மதிப்பிலான தாலிக்குத் தங்கம் மற்றும் ரூ.1.24 கோடியில் திருமண நிதியுதவிகளை வழங்கி பேசினார்.  மேலும், பெருந்துறை அண்ணா சிலை மற்றும் காவல் நிலையம் அருகில் அமைக்கப்பட்ட ரவுண்டானாவை திறந்துவைத்தார்.   
விழாவில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் வி.பி.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி),  உ.தனியரசு (காங்கயம்),  சக்தி மசாலா நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் துரைசாமி,  சாந்தி துரைசாமி,  சாகர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி,  தாளாளர் சௌந்திரராசன் உள்பட பலர்  கலந்து கொண்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.