விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2 கோடி பருத்தி தேக்கம்

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2 கோடி மதிப்புள்ள பருத்தி விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. 

Updated On :24 ஜூலை 2018, 12:43 am IST

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2 கோடி மதிப்புள்ள பருத்தி விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. 
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை பருத்தி, தேங்காய், நிலக்கடலை உள்ளிட்ட வேளாண் பொருள் ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில்,  அந்தியூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து பருத்தி அறுவடை நடைபெற்று வருவதால் சுமார் 9 ஆயிரம் பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பிடி காட்டன் பருத்தி ரகம் அதிக அளவில் வருவதால் திங்கள்கிழமை தொடங்கி இருநாள்கள் வரையில் ஏலம் நடைபெறுகிறது. 
கோவை, திருப்பூர், ஈரோடு, கொங்கணாபுரம், சேலம், பொள்ளாச்சி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் பருத்தியினைக் கொள்முதல் செய்கின்றனர். இந்நிலையில்,  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருவதால் லாரிகள் இயங்கவில்லை. இதனால் ஏலம் முடிவடைந்தவுடன் பருத்தியினை லாரிகளில் ஏற்றிச் செல்ல முடியாது. 
எனவே, வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்காததால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெறவில்லை. லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவடைந்த பின்னர் ஏலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ. 55 வரையில் பருத்தி ஏலம் போன நிலையில்,  தற்போது சுமார் 10 ஆயிரம்  பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதன் மதிப்பு ரூ.2 கோடி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.