சென்னிமலை முருகன் கோயிலில் பாலாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சென்னிமலை, முருகன் கோயிலில், ஆண்டுதோறும் சென்னிமலை கைத்தறி மற்றும் சாயத் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பாலாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த வருடம் 51ஆவது ஆண்டு பாலாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி, சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு பால் குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து, கைலாசநாதர் கோயிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்டனர். மேள, தாளங்கள் முழங்க, 4 ராஜ வீதிகளில் வலம் வந்து மலை அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோயிலுக்குச் சென்றனர். அங்கு, இடும்பனுக்கு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர், மலை மேல் உள்ள முருகன் கோயிலுக்கு படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் சென்றனர். அங்கு, முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனை நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து உற்சவமூர்த்திகளின் பிரகார உலா காட்சியும் நடைபெற்றது.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகக் கமிட்டி தலைவர் எஸ்.முத்துசாமி, துணைத் தலைவர் பி.ஈஸ்வர்மூர்த்தி, செயலாளர் வி.ராமலிங்கன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








