ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் முகாம் புதன்கிழமை (ஜூலை 25) நடைபெறுகிறது.
தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் மூலம் ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது.
புதன்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இம்முகாமில், மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்த அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களும் உரிய பதிவேடுகளுடன் கலந்து கொண்டு வங்கிக் கடன் பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, (மகளிர் திட்டம்), முதல் தளம், பூமாலை வணிக வளாகம், குமலன்குட்டை, பெருந்துறை சாலை, ஈரோடு - 638011 என்ற முகவரியிலோ 0424 - 2257087 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்துக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெதர்லாந்து!

ஐஐஎம் மும்பை-ல் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..?

7 மாதங்களுக்கு முன்பு அணியில் இல்லை... அறிமுக உலகக் கோப்பை ஆட்டத்தில் மிரட்டிய ஆஸி. கோல்கீப்பர்!

மூவர் அரைசதம் விளாசல்; ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா வங்கதேசம்?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


