சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியுள்ளது. 2006 க்குப் பின்னர் அணையின் நீர்மட்டம் தற்போது 110 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் ஆடு வெட்டி, விருந்து படைத்தனர்.
ஈரோடு மாவட்ட மக்களின் நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், கொள்ளளவு 32.80 டிஎம்சி. இதில், 15 அடி உயரம் சேறும் சகதியும் போக மீதியுள்ள 110 அடி அணையின் நீர்மட்டம் உயரமாக உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து அணைக்கு நீர்வரத்து
சராசரியாக விநாடிக்கு 6,556 கன அடியாக உள்ளது. அதாவது நீர் இருப்பு 24.90 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு 900 கனஅடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலுக்கு 500 கன அடி நீரும், குடிநீருக்கு 200 கன அடி நீரும் என மொத்தம் 1,600 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணை நீர்மட்டம் 110 அடியை எட்டிய நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி, விருந்து படைத்தனர்.
அணை நிரம்புவதற்கு 10 அடி இருந்த நிலையில், கீழ்பவானி வாய்க்காலுக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். ஆனால், தண்ணீர் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பை தாமதப்படுத்தாமல் உடனடியாகத் திறந்தால் மட்டுமே கடைமடை வரை தண்ணீர் சென்றடையும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழ்பவானி வாய்க்கால் மூலமாக 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்காலுக்கு தினந்தோறும் விநாடிக்கு 1,450 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

மக்களை நாய் என்றேனா? என் தாய்க்கு இணையானவர்கள் : ராகவா லாரன்ஸ்

விக்ரமின் சியான் 63 படப்பிடிப்பு - புகைப்படங்கள்

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


