திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஈரோட்டில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். 

Updated On :24 ஜூலை 2018, 12:42 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஈரோட்டில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். 
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில்,  ஈரோடு மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு,  சங்கத் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். கிளைச் செயலர் ஜோதிமணி, மாநில துணைப் பொதுச் செயலர் இளங்கோ, சிஐடியூ மாவட்டச் செயலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். 
ஒப்பந்ததாரர்கள் செய்ய வேண்டிய மின் பாதை நீட்டிப்பு உள்ளிட்ட பிற பணிகளில் மின்வாரிய ஊழியர்களை ஈடுபடுத்தக் கூடாது. பண்டக சாலையில் மின் தளவாடப் பொருள்களை ஏற்றி, இறக்கும் பணிகளில் மின் ஊழியர்களைப் பயன்படுத்தக் கூடாது. தற்காலிக பணியிட மாற்றம் எனும் பெயரில் முறைப்பணி பணியாளர்களை அலுவலகப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. ஜிபிஎப் முன்பணம், பகுதி இறுதி தொகை,  எஸ்எல்எஸ் தொகைகளை வழங்குவதில் காலதாமதம் செய்யாமல் விரைவில் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு ஒப்பந்தப்படி, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.380 தினக்கூலியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள்  ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.