ஈரோடு மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆலோசனைக்கூட்டம் அதன் தலைவர் மக்கள்.ஜி.ராஜன் தலைமையில்யில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஈரோடு வருகை தரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசருக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது, பொது மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவது, ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே நடைபெறும் மேம்பாலப் பணி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. பாலம் அமைப்பதற்காக அமைக்கப்பட்ட இரும்புக் கம்பி புதன்கிழமை இரவில் கீழே விழுந்தபோது அப்பகுதியில் சென்ற 2 பேர் காயம் அடைந்தனர். அடிக்கடி விபத்துகள் நடைபெறும் நிலையில், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து பாலப் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் முன்னாள் சட்டப் பேரவை ஆர். எம் .பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
வட்டார தலைவர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட கட்சியின் வட்டாரத் தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









