காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

பாமகவினர் ஆர்ப்பாட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனைக்  கண்டித்து  ஈரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :29 ஜூன் 2018, 12:51 am IST

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனைக்  கண்டித்து  ஈரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில துணை பொதுச் செயலாளர் பொ. ஆறுமுகம் தலைமை வகித்தார். சேலம் - சென்னை 8  வழிச்சாலைக்கு எதிராக  மக்களும்,  விவசாயிகளும் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சியும் போராடி வருகிறது. 
இந்நிலையில், பாமகவையும், குறிப்பிட்ட சமூகத்தினரையும்  பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இழிவாக பேசியதாகவும்,  அவ்வாறு பேசுவதை  நிறுத்திக் கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்  எனவும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
மாநில துணைத்தலைவர் பரமசிவம், ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம், மாவட்டச்செயலர் கிருபாகரன், வன்னியர் பேரவை நிர்வாகி பரமஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்ற கண்டன முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றபோது காவல் துறையினர் அதை தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை பறிமுதல் செய்தனர்.

பவானி, அந்தியூரில்...
பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனைக் கண்டித்து பவானி, அந்தியூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
பவானியில் அந்தியூர் மேட்டூர் பிரிவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலர் மு.வேலுச்சாமி தலைமை வகித்தார். மாநில அமைப்பு துணைச் செயலர் பி.சி.செங்கோட்டையன், மாவட்டத் துணைச் செயலர் பெ.ரா.முருகானந்தம், வழக்குரைஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் நகரச் செயலர் பெ.அழகப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
அந்தியூரில் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் எஸ்சிஆர்.கோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சமூகநீதிப் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் ராமதாஸை விமர்சித்து  அவதூறாக பேசிய தமிழிசையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.