ரூ. 1.45 கோடிக்கு கொப்பரை ஏலம்
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1.45 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.


பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1.45 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை அதன் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் 2,940 மூட்டைகளில் 1,20,000 கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.
இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 121.25-க்கும், அதிகபட்சமாக ரூ. 128.65-க்கும் விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 45.60-க்கும், அதிகபட்சமாக ரூ. 120.10-க்கும் விற்பனையானது. மொத்தம், ரூ. 1.45 கோடிக்கு ஏலம் மூலமாக விற்பனையானது என சங்கத் தலைவர் அருள்ஜோதி செல்வராஜ் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...