வனத்து அந்தோணியார் தேவாலய கட்டுமானப் பணி தொடக்கம்
பவானி அருகே உள்ள வி.மேட்டுப்பாளையம் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் தேவாலயம், கல்லறைத் தோட்டம் கட்டுமானப் பணி சிறப்பு வழிபாடுகளுடன் அடிக்கல் நாட்டப்பட்டு புதன்கிழமை தொடங்கியது.


பவானி அருகே உள்ள வி.மேட்டுப்பாளையம் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் தேவாலயம், கல்லறைத் தோட்டம் கட்டுமானப் பணி சிறப்பு வழிபாடுகளுடன் அடிக்கல் நாட்டப்பட்டு புதன்கிழமை தொடங்கியது.
இக்கிராமத்தில், காவிரிக் கரையோரத்தில் புனித வனத்து அந்தோணியார் தேவாலயமும், கல்லறைத் தோட்டமும் இருந்தது. கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படும்போது தேவாலயம், கல்லறைத் தோட்டத்துக்கு மாற்று இடம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீண்ட நாள்களாக மாற்றிடம் வழங்காததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தேவாலயத்துக்கும், கல்லறைத் தோட்டத்துக்கும் நிலம் அளவீடு செய்து வழங்கப்பட்டது.
இதையடுத்து, புதிய தேவாலயம், கல்லறைத் தோட்டம் அமைக்க சிறப்பு வழிபாடுகளுடன் அடிக்கல் நாட்டப்பட்டது. உதகை மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பங்குத் தந்தைகள் பாஸ்கல் ஜெகன்ராஜ் (பவானி), சகாய டேனிஸ் (பூதப்பாடி), ஜெரோம் (ஊமாரெட்டியூர்), மைக்கேல் திரவியம் (சின்னப்பள்ளம்), ஆரோக்கியராஜ் (ஊராட்சிக்கோட்டை) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...