மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மரம் வளர்ப்பு குறித்த கருத்தரங்கம்

மொடக்குறிச்சியை அடுத்த வேங்கியாம்பாளையத்தில் பசுமை விழுதுகள் இயக்கம் சார்பில் மரம் வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :1 மார்ச் 2018, 1:47 am

DIN

மொடக்குறிச்சியை அடுத்த வேங்கியாம்பாளையத்தில் பசுமை விழுதுகள் இயக்கம் சார்பில் மரம் வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. 
கருத்தரங்குக்கு, பசுமை விழுதுகள் ஒருங்கிணைப்பாளர் செந்தில் பிரகாஷ் தலைமை வகித்தார். சத்தியமங்கலம் புலிகள் காப்பக கெளரவ வன உயிரின பாதுகாவலர் பேராசிரியர் கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார்.
கருத்தரங்கில், வன விலங்குகள் பாதுகாப்பு, காடுகள் வளர்ப்பு, காட்டு வழி நடைபயணம், புதிய அணைகள் கட்டுவதில் உள்ள நன்மை, தீமைகள், பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறைகள், நீர் வழி பாதுகாப்பு, மூலிகை பயன்பாடுகள், மரம் வளர்ப்பு நன்மைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  இதில், காலிங்கராயன் பாசன சபை, பசுமை கிளாம்பாடி இயக்கம் உள்ளிட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.